மே மாசம் குழந்தை பிறக்கும்: மகத் அறிவிப்பு!

1 February 2021, 8:13 pm
Quick Share

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் மகத் வரும் மே மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வல்லன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மகத். அந்தப் படத்தின் கதாபாத்திரம் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. தல அஜித் நடித்த மங்காத்தா படமே அவருக்கு ஒரு நடிகருக்கான அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன், கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இது தவிர, விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக மகத் கூறியிருந்தார். மகத் மற்றும் பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டர்.

இந்த நிலையில், இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாடும் மகத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கர்ப்பமாக இருக்கும் பிராச்சி மிஸ்ராவின் வயிற்றில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், நாங்கள் இருவரும் குழந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். வரும் மே மாதம் குழந்தை வருகிறது. இந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0