கடந்த 2023 ஆம் ஆண்டு ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரீத்தி சனான் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆதிபுருஷ்”. இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் மிகவும் சுமாராக இருந்ததால் இத்திரைப்படம் ட்ரோலில் சிக்கியது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் வெளியானபோது திரையரங்குகளில் ஒரு இருக்கை அனுமனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல மீம்களும் வெளிவந்தன.
இத்திரைப்படமும் மிக சுமாராக இருந்ததால் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது “மகாவதார்” என்ற பெயரில் புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து பல அனிமேஷன் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது ஹொம்பாலே நிறுவனம். இதனை மகாவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள “மகாவதார் நரசிம்மா” என்ற அனிமேஷன் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து “மகாவதார்” வரிசையில்,
“மகாவதார் பரசுராம்” (2027), “மகாவதார் ரகுநந்தன்” (2029), “மகாவதார் துவாரகாதீஷ்” (2031), “மகாவதார் கோகுல நந்தா” (2033), “மகாவதார் கல்கி பாகம் 1” (2035), “மகாவதார் கல்கி பாகம் 2” (2037) ஆகிய திரைப்படங்களை ஹொம்பாலே நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் “மகாவதார்” சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமான “மகாவதார் நரசிம்மா” திரைப்படத்தின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அனிமேஷனில் இத்திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த புரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர், “ஆதிபுருஷுக்கு போட்டியா?” என கிண்டலடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை அஸ்வின் குமார் என்பவர் இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.