“கலர்ஃபுல் லாலிபப்” – அழகு சொட்ட சொட்ட மஹிமா நம்பியார் வெளியிட்ட புகைப்படம்

6 March 2021, 5:22 pm
Quick Share

சாட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஹிமா நம்பியார். கேரளாவை சேர்ந்த இவர், முதலில் சிந்து சமவெளி படத்தில் நடிப்பதாக இருந்தது. சொந்த காரணங்களுக்காக அந்தப்படத்தை விட்டு விலகினார். அவரது முதல் படமான சாட்டையில் நடிக்கும் பொழுது அவருக்கு 18 வயது.

அதில் அறிவழகி எனும் பள்ளி மாணவியாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன்பின் மொசக்குட்டி, என்னமோ நடக்குது, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, அசுரகுரு போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் மகிமா நம்பியார்.

வயது கூடக்கூட மெருகேறிக் கொண்டே வரும் மகிமா நம்பியார், படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தன்னை மார்க்கெட் இல்லாத நடிகை என்று யாரும் சொல்லி விடக்கூடாது என்ற காரணத்திற்காக தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கலர்ஃபுல்லாக ஆடையணிந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “கலர்ஃபுல் லாலிபப்” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 1334

1

0

1 thought on ““கலர்ஃபுல் லாலிபப்” – அழகு சொட்ட சொட்ட மஹிமா நம்பியார் வெளியிட்ட புகைப்படம்

Comments are closed.