Breakup’அ யாரு சொன்னது? வயசான கட்டையுடன் வாழத்துடிக்கும் அர்ஜுன் கபூர் – காதலியுடன் மீண்டும் டேட்டிங்!

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற 20 வயது மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா. தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் அர்ஜுன் கபூர் -காதலி மலாய்க்காவை பிரேக்கப் செய்துவிட்டதாக செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மலைகா அரோரா அர்ஜுன் கபூர் உறவினர்களான குஷி கபூர், போனி கபூர், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்துள்ளார். இருந்தாலும் காதலன் அர்ஜுன் கபூரை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்.

மேலும் அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில் மலாய்கா தனது இன்ஸ்டா ஸ்டோரீஸில் “மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம். கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள்” என கூறி பதிவிட்டுள்ளார். அர்ஜுன் கபூர் மலாய்கா அரோராவை காதலிப்பதற்கு அர்ஜுன் கபூர் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும் இதனால் அவர்கள் சந்திக்க கூட விடுவதில்லை என்றும் மேலும் அர்ஜுன் கபூருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைக்க திட்டமிட்டிருப்பதாக வதந்தி பரவி பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நாங்க பிரேக்கப் பண்ணிட்டோமா யார் சொன்னது? என்ற பாணியில் இருவரும் மீண்டும் டேட்டிங் சென்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. யார் என்ன சொன்னாலும் மலாய்க்காவுடன் வாழ்வது தான் வாழ்க்கை என ஒற்றை காலில் நிற்கிறாராம் அர்ஜுன் கபூர். எது எப்படியோ மலாய்க்காவிற்கு மஜா தான். இதோ அந்த லேட்டஸ்ட் வீடியோ!

Ramya Shree

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

9 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

11 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.