“யார பார்க்குறது, யார விடுறதுனே தெரியலயே” – vogue அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த மூவர் கவர்ச்சி கூட்டணி

2 March 2021, 6:31 pm
Quick Share

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

தற்போது தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப் படங்களாக வெளியிட்டு வருகிறார் மாளவிகா மோகனன். அந்த வரிசையில் தற்போது ‘வோக்’ என்ற இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். Vogue என்ற பத்திரிக்கை ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல்கான உலக அளவில் வெளியாகும் இதழ். அதன் அட்டைப்படத்தில் இடம் பெறுவது என்பது நடிகைகளின் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

அதன் இந்திய பதிப்பில் தற்போது வெளிவந்துள்ள இதழில் மாளவிகா மோகனன் இடம் பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து ராதிகா ஆப்தே மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ராதிகா ஆப்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். அதுபோலப் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

ஸ்வரா பாஸ்கர், தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் தனுஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைம் இல் வெளியான 18+ சீரியஸ் ஆன ராஸ்பரியில் வேற மாதிரி நடித்திருந்தார். இந்த மூவர் கூட்டணியில் பார்த்த ரசிகர்கள் “யார பார்க்குறது, யார விடுறதுனே தெரியலயே” என்று குழம்பி வருகின்றனர்.

Views: - 1071

1

2