தனுஷ் என்னை இப்படிதான் செல்லமா கூப்பிடுவார்..! மாளவிகா மோகனனுக்கு செல்ல பேர் வைத்த தனுஷ்..!

23 June 2021, 9:27 pm
Quick Share

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டத்திற்காக காத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.

மாளவிகா மோகனனை அவரது ரசிகர்கள் செல்லமாக மாலு என அழைத்து வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் தனுஷ் அவரை எப்படி அழைப்பார் என ட்விட்டர் ஸ்பேசில் பேசியுள்ளார். ரசிகர்கள் மாலுமா என்று அழைப்பார்கள்.. ஆனால் தனுஷ் என்னை மால்மோ என்று தான் கூப்பிடுவார். எனக்கு நெருக்கமானவர்களும் என்னை மாலு என்று தான் அழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Views: - 317

7

0