‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் வஸந்த் ரவி, ரோபோ ஷங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இதுதவிர கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் மற்றுமொரு சூப்பர்ஸ்டார் நடிகரும் இணைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. ரஜினியின் நண்பரும், மலையாள நடிகருமான மோகன்லால் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். அவரும், ரஜினியும் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் வருகிற ஜனவரி 8-ந் தேதி படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறையாகும். இப்படி ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ஷிவ ராஜ்குமார், மோகன்லால் என மூன்று திரையுலகை சேர்ந்த சூப்பர்ஸ்டார்களை நடிக்க வைக்கும் நெல்சனை அவர் பாணியிலே நெல்சா வேறமாறி… வேறமாறி… என வியந்து பாராட்டி ரசிகர்கள் வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.