மாஸ்டர் படம் பார்க்க மலேசியாவில் இருந்து சென்னை வந்து அராஜகம் செய்த மலேசியப் பெண் !

3 February 2021, 7:21 pm
Quick Share

இப்போ வந்துரும், தீபாவளிக்கு வரும், மே மாசம் வந்துரும், என்று அப்படி இப்படின்னு சொல்லி பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் போகி அன்று ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். படத்திற்கு ஓகே, சுமார், Average என்று விமர்சனங்கள் வர எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஒரு தரப்பு ரசிகர்கள் 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்த்து வந்தார்கள்.

இந்த படம் ரீலீஸ் ஆன சில நாட்களில் அமேசான் பிரைமில் முழு படமும் வெளியிட்டிருந்தார்கள். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை ஆனது குடும்பம் குடும்பமாக மாஸ்டர் படத்தை பார்த்து வந்தார்கள். ஆனால் வெளிநாடுகள் ஆன மலேசியா மற்றும் சில Europe நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகவில்லை.

இதனால் ஒரு மலேசிய விஜய் ரசிகை, மலேசியாவில் இருந்து சென்னை வந்து அண்ணா சாலையில் ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த சீட்டையும் முன்பதிவு செய்துள்ளார்.

150 Seats கொண்ட அந்த தியேட்டர் மொத்தமாக புக்கிங் செய்யப்பட்டு, சென்னையில் இருக்கும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விசில் அடித்து மகிழ்ந்து தீர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Views: - 0

0

0