2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் “சர்வோபரி பலக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மமிதா பைஜு. அதனை தொடர்ந்து “தாஹினி”, “வரதன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த மமிதா பைஜு, “பிரேமலு” திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமானார். தமிழில் ஜிவி பிரகாஷின் “ரெபல்” திரைப்படத்தில் நடித்திருந்தார் மமிதா பைஜு.
அதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வரும் மமிதா பைஜு, அதனை தொடர்ந்து “இரண்டு வானம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. இவ்வாறு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் மமிதா பைஜு தற்போது சூர்யா திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 46 ஆவது திரைப்படத்தில் “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கான தொடக்க பூஜை இன்று நடைபெற்றது. இதில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் மமிதா பைஜுவும் கலந்துகொண்டார்.
“சூர்யா 46” திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் மமிதா பைஜுவின் வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
குறிக்கோளுக்கு அப்புறம்தான் கல்யாணம்… நடிகர் சங்க கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தி அந்த கட்டிடத்தில்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்திருந்தார் விஷால்.…
அட்டகாசமான டிரெயிலர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம்…
தமிழ் சினிமாவில் சுயம்பாக கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசகிர்கள் படையுடன், தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும்…
கன்னியாகுமரி ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது பெண் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள வலை…
டேட்டிங் செய்யும் சமந்தா? “ஃபேமிலி மேன்”, “சிட்டாடல்” போன்ற பிரபலமான வெப் சீரீஸ்களை இயக்கியவர்கள் ராஜ்-டிகே. இந்த இருவரில் ராஜ்…
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள்…
This website uses cookies.