நாள் ஒரு நட்சத்திரம் : ‘மம்முக்கா’ என மலையாள ரசிகர்களால் கொண்டாடப்படும் மம்முட்டி!!

7 September 2020, 4:53 pm
Quick Share

“மம்முக்கா” முகவரி தேவை அற்ற நாயகன். மலையாள திரையுலகில் மட்டும் இன்றி தமிழ் திரையுலகிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம். முகமது குட்டியாக இருந்து, மம்முட்டியாக மாறி, மம்முக்காவாக ரசிகர் மனதில் இடம் பிடித்த அவர் கதாநாயகன் என்பதையும் தாண்டி அவருக்கான கதையில் நாயாகனாகவே வாழ்ந்து வருகிறார்.

கேரள நாட்டின் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அழகு தான் என… அவரை ரசிக்காத கண்கள் இருக்க முடியாது. 69 வயதாகியும் அவரின் அழகான உடல் கட்டு அனைவரையும் இன்றளவும் ஈர்த்து வருகிறது. அத்தனையையும் கடந்து, அவர் சிறந்த நடிகன் என்பதை தனது நடிப்பின் மூலம் உலகிற்கு பரைசாற்றிய “மெகா ஸ்டார்” மெகா ஹிட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்.

சினிமாவை கடந்து அவருக்கு வாகனங்கள் மீதும், டிரைவிங் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆரம்ப காலத்தில் தான் முதன்முதலில் வாங்கிய ஸ்கூட்டர், இன்றும் தன் நினைவில் உள்ளது என அவர் சொல்வதை கேட்கும்போது.. அவரும் ஒரு சாதாரண உணர்வுகளை கொண்ட மனிதன் தான் என்பதை உணர்த்துகிறார்.

நடிகர் கமலஹாசன், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது தங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவது, அன்று முதல் இன்றுள்ள நடிகர்கள் வரை தொடர்கிறது. ஆனால் மலையாள ஸ்டார் மோகன் லால், மம்முட்டி உள்ளிட்டோர் அதற்காக மெனக்கெட்டது இல்லை.. உடல் கட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் நான் நானாக நடிப்பதே எனது வெற்றி என்ற அவரின் பார்வை மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மட்டும் இல்லாமல் ஆரம்ப காலத்தில் என்படத்திற்கான வருவாய் மிக குறைந்த அளவுதான்.. என் படத்தை விரும்பி பார்கும் ஆட்களும் அவ்வளவு இல்லை.. நாட்கள் கடக்க கடக்க கதைகளின் தாக்கமும், கதாபாத்திரத்தில் எனது நடிப்பும் இயக்குனர்கள் மற்றும் உடன் பணியாற்றியவர்களின் உழைப்பாலும்தான் நான் வெளியில் தெரிய ஆரம்பித்தேன் என தான் கடந்து வந்த பாதையையும் நினைவில் கொண்டுள்ளார்.

தமிழ் திரையில் ‘மெளனம் சம்மதம்’ படத்தில் அறிமுகமான மம்முட்டி, தளபதி, ஆனந்தம், எதிரும் புதிரும், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடத்து தமிழ் திரை ரசிகர்கள் மத்தியிலும் விலகாத இடம் பிடித்தார். மலையாளப்படங்களுக்கு உண்டான ஸிம்பிளி சிட்டி பாப்புலரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் மம்முட்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

அவர் தன் நடிப்பின் மூலம் ஈட்டும் வருவாயில் விளம்பரம் இன்றி ஏராளமான உதவிகளை செய்து வருகிறார் என்பது மட்டும் காதுகளுக்கு விழுந்துள்ளது. இப்படி உலக ரசிகர்கள் கொண்டாடும் மம்முக்கா மேலும் பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்… இப்படி முடிகிறது நாள் ஒரு நாயகன் கதை…

Views: - 0

0

0