துல்கர் சல்மானை அவமானப்படுத்திய மணிரத்தினம்?.. தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்த ஹீரோக்கள்..!

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில், திரிஷா, கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சர்பியா நாட்டிற்கு படக்குழு சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் டேட் பிரச்சனை காரணமாக படத்ததில் இருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அவருக்கு பதிலாக மணிரத்னம் யாரை தேர்வு செய்து நடிக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு பதிலாக நானியை நடிக்க வைக்க முயற்சிகளை படக்குழு மேற்கொண்டு வருவதாகவும், இந்த படம் நானிக்கு தமிழில் மிகப்பெரிய கம்பவுக்காக அமையும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் காக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசன் நேரடியாக இந்த படத்தின் ஷூட்டிங் காக செர்பியா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இந்த ஷூட்டிங்கில் கமல் பங்கேற்க முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பணிகளில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.

இதனை தொடர்ந்து, அந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த, மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதை அடுத்து, கமலஹாசன் படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, செர்பியாவில் நடைபெற இருந்த ஷூட்டிங் கமலஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக முன்பே கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்த தகவலின்படி அந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இன்னும் ஒரு மாத காலத்திற்கு பட குழுவினர் அடுத்த கட்டம் குறித்து திட்டமிட முடியாத நிலையில் உள்ளனர். இது போன்ற குளறுபடியினால் தான் முன்னதாகவே துல்கர் சல்மான் கால்ஷிப்ட் பிரச்சினையை காரணம் காட்டி படத்தில் இருந்து முன்னதாகவே விலகினார். தற்போது, ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து இதே பிரச்சினையால் தான் விலகி உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் படத்தில் கமிட்டாகி நடிக்கவிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் மீண்டும் படத்தில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துல்கர் சல்மானை தனது ஆபிசுக்கு அழைத்துள்ளார்.

மேலும் படிக்க: கலாநிதி மாறன் பொண்ண பாத்தா நமக்கு BP ஏறுது.. வைரலாகும் ரஜினி சொன்ன வார்த்தை..!(Video)

ஆனால், இயக்குனர் மணிரத்தினம் அதே ஆபீசில் இருந்து கொண்டு துல்கர் சல்மானிடம் வந்து பேசவில்லையாம். தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பி பேச வைத்தாராம். இதனால், கடுப்பாகி தான் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சொல்லப்பட்டது. பின் மணிரத்தினத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாசினி துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இப்படத்தில் இணைய வைத்துள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், மணிரத்தினம் அப்படி செய்யக்கூடிய நபர் இல்லை என்றும், இதே போல் ஒரு விஷயம் நடக்கவே இல்லை. இது முழுக்க பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. மேலும் பதிதிரிகையாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

மேலும், சிம்பு தக் லைப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் துல்கரின் வேடத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட சிம்பு இப்போது புதிதாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே, கமல் தயாரிப்பில் சிம்பு எஸ் டி ஆர் 48 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிம்பு தக் லைப் படத்தில் நடித்திருப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.