தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் சீனு ராமசாமி. கடைசியாக இவர் இயக்கத்தில் மாமனிதன் என்ற படம் வெளிவந்தது. வசூல் ரீதியாக இந்த படம் சரிவை சந்தித்தாலும் விமர்சனம் ரீதியாக இந்த படம் பல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனு ராமசாமி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி. அதில், அவர் கூறும் போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த பிரபல நடிகை மனிஷா யாதவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.
அந்த சமயத்தில், சீனு ராமசாமி அந்த நடிகைக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தில், மனுஷா யாதவுக்கு ஒரு வாரத்திற்கு மேல் படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதனால், அங்கு இருந்து கிளம்பி வந்து விட்டார். அதன் பின்னர் எனக்கு போன் செய்து சீனு ராமசாமி எந்த மாதிரியான பாலியல் தொல்லைகளை கொடுத்தார் என்று என்னிடம் கூறினார்.
அந்த வாக்குமூலம் என்னிடம் இருக்கிறது. இது தான் சீனு ராமசாமியின் இன்னொரு முகம். பல இயக்குனர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிஸ்மிக்கு பதிலடி கொடுத்த நடந்த உண்மையை உடைத்துள்ளார் சீனு ராமசாமி. இது குறித்த பதிவில்,
“வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிட்டாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க. இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என பதிவிட்டு பிஸ்மிக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.
எனவே, மனிஷா யாதவ்வும் இது குறித்து விரைவில் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், இதற்கு மனிஷா யாதவ் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், குப்பை கதை ஆடியோ லாஞ்சில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்தார் தான் எல்லோருக்கும் நன்றி சொன்னதைப் போல் அவருக்கும் சொன்னேன். 9 வருடங்களுக்கு முன்பு நான் என்ன சொன்னேன்னோ அதில், உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டவர்களிடம் மறுபடியும் எப்படி வேலை செய்ய முடியும். சீனு ராமசாமி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.