குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன் பின் மிகப் பிரபலமான கதாநாயகியாக ஆனவர்தான் மஞ்சிமா மோகன். 1997 ஆம் ஆண்டு “கலியூஞ்சல்” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு “ஒரு வடக்கன் செல்ஃபி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமாக ஆனார்.
இவர் கௌதம் கார்த்திக்குடன் “தேவராட்டம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின்போது இருவருக்குள்ளும் காதல் மலர 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சமீப காலமாக இவரது உடல் எடையை குறித்த பேச்சுக்கள் அதிகம் காணப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மஞ்சிமா மோகன் அவரது உடல் எடை அதிகரித்ததன் மீது வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“எனக்கு பிசிஓடி பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாகத்தான் எடை கூடியது. பிசிஓடியை குறைக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் எடையை குறைக்க பல மருத்துவர்களை அணுகினேன்” என அப்பேட்டியில் பேசிய அவர்,
“உடல் எடைதான் மிகவும் பெரிய பிரச்சனை என்பது போல் பேசுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தை பற்றி பேசமாட்டார்கள். எடையை குறைத்திருந்தால் எனக்கு இன்னும் சில படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அதன் பின் வேறு யாரும் நம்மை எப்படி இருக்கிறோம் என விசாரிக்க மாட்டார்கள். சினிமா சம்பந்தமில்லாத வேறு சில இலக்குகளும் எனக்கு உள்ளது” எனவும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.