என் இனிய தமிழ் மக்களே என்று சொன்னவுடன் சட்டென நியாபகத்திற்கு வருபவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பெரும்பாலும் தன் ஒவ்வொரு படங்களிலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை கொடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முத்தான இயக்குநரகளில் ஒருவரான பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் உதவி பணியாற்றி உள்ளனர்.
ஆனால், இதில் சோகம் என்னவென்றால் பல நடிகர்களின் சினிமா பயணத்தை வெற்றிகரமாகிய பாரதிராஜா 1999 ஆம் ஆண்டு தன்னுடைய மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் தாஜ்மஹால். அப்படத்திற்கு பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் பெற்று காண முடியவில்லை. நடிகர் மனோஜ் பாரதிராஜா சாதுரியன் படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த நடிகை நந்திதாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதித்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மதிவதனி மற்றும் அர்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.