இந்தியன் 2 ஷூட்டிங்கில் லீக்கான மாஸ் காட்சி… வைரலாகும் வீடியோ!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.

இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் கமல் ஹாசன் பெண் வேடமிட்டு ஒரு ரோலில் நடிக்கிறாராம். அந்த ரோல் படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. கமல் ஏற்கனவே அவ்வை ஷண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் லேடி கெட்டப்பில் நடித்திருந்தார். அந்த படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. எனவே இந்தியன் 2 படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும். சங்கர் தரமான சம்பவம் செய்திருப்பார் என யூகிக்கமுடிகிறது. எனவே படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு மாஸ் காட்சி லீக்காகி உள்ளது. இதில் வயசான கெட்டப்பில் கமல் ஹாசன் பொதுவெளியில் நடித்துள்ள இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

Ramya Shree

Recent Posts

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

11 minutes ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

46 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

4 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

4 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

This website uses cookies.