மாஸ்டர் தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூலா? அதுவும் 7 நாள்ல?

20 January 2021, 2:21 pm
Quick Share


தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.90 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.


விஜய் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது விஜய்யின் மாஸ்டர் படத்திற்குதான். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு பல பிரச்சனைகளை கடந்து வந்த மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, மாஸ்டர் படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதோடு, உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நம்பர் ஒன் இடமும் பிடித்துள்ளது.

மாஸ்டர் படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.90 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 7ஆம் நாளான இன்று மாஸ்டர் படம் தமிழக வசூலில் ரூ.100 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, நாசர், சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், கௌரி கிஷா, பிரிகிதா, பூவையார், ரம்யா சுப்பிரமணியன், சாய் தீனா, ரமேஷ் திலக், அருண் அலெக்சாண்டர், மகாநதி சங்கர் என்று ஏராளமான பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கிற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தாலும் மாஸ்டர் படம் உலகளவில் சாதனை படைத்து வருகிறது. ஆம் உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து மாஸ்டர் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார்.

இந்த மாத இறுதிக்குள் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடுவார்கள். வரும் பிப்ரவரி மாதத்தில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி65 படம் திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0