கலெக்‌ஷன் கிங் தளபதி விஜய்: தமிழத்தில் அள்ளிக் குவித்த வசூல்!

16 January 2021, 2:00 pm
Quick Share


விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் 3 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்த படம் விஜய்யின் மாஸ்டர். பல பிரச்சனைகளை கடந்து வந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். கைதி படத்தைப் போன்று இந்தப் படத்திலும் இருட்டு, லாரி, வாளி, போதைப் பொருள் அவரது சாராம்சம் இடம் பெற்றுள்ளது.


மாஸ்டர் படத்தை விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் பாதி, பாதியாகவே பிரித்துக் கொண்டுள்ளனர். ஆம், முதல் பாதியை விஜய்க்குரிய படமாகவே எடுத்துள்ளார். இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் தனக்குரிய படமாகவே எடுத்துள்ளார். அதில், கொஞ்சம் விஜய்யின் நக்கல், நய்யாண்டியை பாடலாக கொடுத்துள்ளார். ஆம், டி ராஜேந்தர் பாடும் வாடா என் மச்சி வாழக்கா பச்சி என்ற பாடலை பாடியுள்ளார்


மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜ சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான பிரலங்கள் நடித்துள்ளனர்.


எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த சினிமா ரசிகர்கள், பிரபலங்களுக்கு மாஸ்டர் படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற மாஸ்டர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கேரளா, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் வசூலில் சாதிக்க ஒன்றும் தவறவில்லை.


மாஸ்டர் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று மாஸ்டர் படத்தின் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளர் கௌசிக் எல்.எம் கூறியிருப்பதாவது: மூன்றாம் நாளில் மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் மாஸ்டர் தளபதி விஜய், இதன் மூலம் பழைய நாட்களாக காட்டியுள்ளார். பொங்கல் நாட்களில் மாஸ்டர் படம் அசால்ட்டு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் மாஸ்டர் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிருந்தாலும், அது தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

இது குறித்து எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியிருப்பதாவது: மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை.


தமிழில் மாஸ்டர் உருவாக்கிய மாயாஜாலத்தை ஹிந்தி ரசிகர்களையும் கவரும் வகையில், நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0