கலெக்‌ஷன் கோட்டையில் கொடிகட்டி பறக்கும் மாஸ்டர்: சென்னையில் இத்தனை கோடி வசூலா?

14 January 2021, 10:57 am
Master 1- Updatenews360
Quick Share

விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ.1 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான பிரலங்கள் நடித்துள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி நேற்று வெளியாகியுள்ளது.

எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த சினிமா ரசிகர்கள், பிரபலங்களுக்கு மாஸ்டர் படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற மாஸ்டர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கேரளா, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் வசூலில் சாதிக்க ஒன்றும் தவறவில்லை.

வசூல் ரீதியாக மாஸ்டர் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளர் எல்.எம் கௌசிக் கூறியிருப்பதாவது: மாஸ்டர் படம் சென்னையில் மட்டும் ரூ.1.21 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இன்னும் பொங்கல் பண்டிகை நாட்கள் இருப்பதால் மாஸ்டர் படத்தின் வசூலுக்கு மட்டும் பஞ்சமிருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த படங்களில் சர்கார் முதலிடம், பிகில் 2ஆவது இடமும், மெர்சல் 3ஆவது இடங்களும் பிடித்துள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து மாஸ்டர் 4ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரபிரதேசத்தில் மாஸ்டர் படம் ரூ.5.74 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா என்பவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான ஆஸ்திரேலியாவில் ரூ.1.4 கோடியும், நியூசிலாந்தில் ரூ.39 லட்சம் வரையிலும் வசூல் குவித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0