மாஸ்டர் OTTயில் எப்போது ரிலீஸ்? மாஸ்டர் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம் வீடியோ?

19 January 2021, 9:43 pm
Quick Share

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

பல பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்தித்த மாஸ்டர் படம் ஒருவழியாக கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் உலக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. இந்தியளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது.

மாஸ்டர் படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வந்தது. இது குறித்து மாஸ்டர் படக்குழுவினர் கூறியிருந்ததாவது: பெரிய பெரிய படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களிடமும், படக்குழுவினரிடமும் ஓடிடி நிறுவனங்கள் படத்தை வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது வழக்கம் தான். ஏற்கனவே சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், பென்குயின், மாறா, பூமி ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன.

அப்படியிருக்கும் போது மாஸ்டர் படக்குழுவினரிடமும் ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், நாங்கள் எங்களது முடிவில் உறுதியாக இருக்கிறோம். அதாவது, கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று கூறியிருந்தனர். இந்த நிலையில், மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே செய்தி வெளியானது.

ஆனால், திரையரங்கில் மாஸ்டர் வெளியான பிறகு இரு வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்தும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருவதால், இன்னும் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படமும், அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும் ஒன்றாக இணைந்து ஓடிடி தளத்தில் வெளியிடும் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0