தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் மாஸ்டர் திரைப்படம் – விஸ்வாசம் ரெக்கார்டை மிஞ்சுமா என ரசிகர்கள் சந்தேகம் !

5 April 2021, 10:22 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் வசூலில் ஓரளவு பரவால்லை.

தற்போது விஜய் 65 படத்தை தொடர்ந்து அடுத்த படமான விஜய் 66 படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் மீண்டும் இயக்கபோவதாக தெரிகிறது. குடும்ப மக்கள் மத்தியில் எப்போதுமே விஜய்க்கு மவுசு அதிகம். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் விஸ்வாசம் பட TRP ரெக்கார்டை இரண்டு வருடமாக உடைக்க முடியாமல் இருக்கிறார்.

இதற்காக தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று மாஸ்டர் படத்தை சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட்டமாக இருக்க மறு பக்கம் எப்படியாவது விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார்கள்.

Views: - 43

9

0