மாஸ்டர் படத்தில் இருந்து “Quit Pannuda” பாடல் Lyrical Video Release ! தளபதி Stills வேற லெவல் !

By: Udayaraman
16 October 2020, 7:37 pm
Quick Share

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நொடி வரை படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது. அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு படத்தின் டிரெய்லர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்தால் ஏழு மாதத்திற்கு முன்பு வெளியான பாடல்களின் லிரிக் வீடியோவை ரிலீஸ் செய்கிறார்கள்.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் சிலது நல்ல பெயரை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் ஒத்து, குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்கள் செம்ம ஹிட் அடித்துள்ளன.

இன்று தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத்தின் பிறந்தநாள் பரிசாக மாஸ்டர் படத்தில் இருந்து “Quit Pannuda” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

Views: - 215

0

0