மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான மாஸ் ஆன வாத்தி கபடி வீடியோ !

13 January 2021, 7:16 pm
Quick Share

படம் நல்லா இருக்கு, நல்லா இல்ல, என்கிற விஷயத்தை எல்லாம் தாண்டி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு நாள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு பிறகு ஒரு மாஸ் ஹீரோ படம் ரிலீசாகிறது, கொரோனாவை பொருட்படுத்தாமல் கூட்டம் அலைமோதுகிறது, அதற்கு ஒரே ஒரு பெயர் விஜய்.

தமிழ் சினிமாவின் முன்னணி நிலையில் இருக்கும் விஜய்யின் லேட்டஸ்ட் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், தீனா, என பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

சோகம் என்ன என்றால் படம் ரொம்ப சுமார் ரகம்.
இந்த நிலையில் சில மணி நிமிங்களுக்கு முன் மாஸ்டர் படத்தில் இருந்து இரண்டாம் பாதியில் நல்லா இருக்கும் ஓரிரு காட்சிகளில் இருந்து ஒரு காட்சியை ரீலீஸ் செய்துள்ளார்கள்.

அது என்ன என்றால், விஜய் கபடி ஆடுவது போல ஒரு மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதனால் சற்று Upset ஆக இருந்த விஜய் ரசிகர்கள், இப்போ செம்ம Surprise-இல் இருக்கிறார்கள் நம்ம தளபதி ரசிகர்கள்.

Views: - 8

0

0