“உடம்பு ஃபுல்லா வியர்வை” மீனா வெளியிட்ட புகைப்படங்கள் !

4 March 2021, 9:00 am
Quick Share

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 25 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.

தற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் கிறங்கடிக்க செய்கிறார்.

நடிகை மீனா சமீபத்தில் விமானத்தில் பயணம் சென்ற போது கொரோனா நோய் வரகூடாது என்பதற்காக ஃபுல் Cover அணிந்து சென்றுள்ளார்.

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராமில் “விமானத்தில் ஏசி போட்டு கூட எனக்கு வியர்வை கொட்டி உள்ளது. இந்த ட்ரஸ் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமானது, அதனால் இதை அணிந்து கொண்டு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது சல்யூட்” என்று தனது சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களை Share செய்துள்ளார் நடிகை மீனா.

Views: - 7551

1

2