விஜய், சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட மீரா மிதுன் – விளாசும் ரசிகர்கள் !

Author: Udhayakumar Raman
17 March 2021, 8:39 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 – ஆம் வருடம் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் விஜய்யும், விஜய்யின் மனைவியான சங்கீதாவையும், சூர்யாவையும், சூர்யாவின் மனைவியான ஜோதிகாவையும், தவறாக பேசி ஒரு வீடியோவும் வெளியிட்டு விஜய், சூர்யா ரசிகர்களை செம்ம காண்டு ஆக்கினார்.

தற்போது, இவர் விஜய், சூர்யா மற்றும் அவர்களின் ரசிகர்களிடம் மன்னிப்பு வீடியோ இணையதளத்தில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில், ” இத்தனை நாட்கள் என்னை சுற்றி நடந்த சம்பவங்களுக்கு பத்திரிக்கையாளர் அப்சரா ரெட்டி என்னும் திருநங்கை தான் காரணம், அவர்தான் எனக்கு வரும் வாய்ப்புகளை விஜய் மற்றும் சூர்யா தடுக்கிறார்கள் என்கிற பிம்பத்தை உண்மை என என்னை நம்பவைத்தார்.

இந்த சம்பவங்களுக்கும் அவர்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என இப்போதுதான் எனக்கு தெரிந்தது. எனவே நான் பேசிய பேச்சுக்களுக்கு விஜய், சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு மற்றும் திரையுலகை சார்ந்த எல்லோருக்கும் என்னுடைய தரம் தாழ்ந்த மன்னிப்பை கேட்கிறேன்” என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த விஜய் சூர்யா ரசிகர்கள், ” இப்படி எல்லாம் நீ பேசினா உன்னை விட்டுவோமா?” என்று விளாசி வருகின்றனர்.

Views: - 290

40

166