“End Of The Day- யாரு ஜெயிலுக்கு போறாங்கனு பாப்போம்” மீராவையே மிரட்டிய ஷாலு ஷாமு..!

12 August 2020, 12:36 pm
Quick Share

தன் மேல் உள்ள தவறை உணராத நீ விரைவில் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும் என, நடிகை ஷாலு ஷாமு மீராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன்னை சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் சர்ச்சை நாயகி மீரா மிதுன், சமூக வலைதலங்களில் தொடர்ந்து தேவையற்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்து தவறாக பேசிய மீரா மிதுன், அதற்கு கண்டனம் தெரிவிப்பவர்களையும் சேர்த்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த சூழலில், சமீபத்தில் மீரா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் ரவுடிகளை ஏவி விட்டு சமூக வலைதளங்களில் தன்னை தவறாக பேச சொல்லி இருக்குமாறு கூறினார்.

இது போன்ற மீராவின் கருத்துக்களுக்கு நடிகை ஷாலு ஷாமு உடனுக்குடனே பதிலடி கொடுத்து வருகிறார். இதை பார்த்த மீரா, ஷாலு ஷாமு ஒரு க்கிருமினல் கும்பலின் கூட்டாளி என விமர்சித்திருந்தார்.

இது குறித்து ஷாலு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மீரா நீ ஒரு மாஃபியா கும்பலில் இருந்து வந்தவள் தானே எனவும், உன் மேல் தமிழ் நாடு முழுவதும் ஆயிரத்து எட்டு வழக்குகள் போடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், தன் மேல் உள்ள தவறை உணராத நீ விரைவில் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும் எனவும் மிரட்டியுள்ளார்.

Views: - 1

0

0