சினிமா / TV

பெரிய பங்களா வீடு கட்டி அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய நடிகை மிருணாளினி ரவி!

டப்ஸ்மாஷ் ஆப் மூலம் விதவிதமான வீடியோக்களையும் தனது கவர்ச்சியான நடன வீடியோக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததன் மூலமாக மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி.

இவர் டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் ஆப் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான பெண்ணாக வளம் வந்து கொண்டிருந்தார்.இதனிடையே அவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. ஆம் இவரின் tiktok வீடியோவை பார்த்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் ஆடிஷனுக்கு அழைத்தார்.

ஆடிஷனில் செலக்ட் ஆன மிருணாளினி ரவி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடிக்க ஆரம்பித்தார். அதுதான் அவரது முதல் திரைப்படம் அப்படத்தில் சேட்டு என்ற ஏலியன் பின் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் .

சின்ன சின்ன கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் வகையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் மிருணாளினி. அந்த படத்தை தொடர்ந்து சாம்பியன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து எனிமி ,எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அப்பாவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட வாரிசு நடிகைகள்.. அதுல இவங்க கொஞ்சம் ஓவரா தான் போயிட்டாங்க..!

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் மிருணாளினி ரவி தனது தந்தையின் மிகப்பெரிய கனவாக பெரிய பங்களா வீடு ஒன்றை பெங்களூரில் கட்டி குடிப்பெயர்ந்து இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட அதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்கள் குவித்து வருகிறார்கள். மேலும் அந்த வீட்டிற்கு அவரது அம்மாவின் பெயரான “மொழி இல்லம்” என்ற பெயரையே வைத்திருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.