ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய சான்ஸ்.. மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. புலம்பும் நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 11:50 am
ரஜினிக்கு மகளாக நடிக்க சான்ஸ் கிடைச்சும் கடைசியில் நடக்காமல் போனதாக பிரபல நடிகை புலம்பி தள்ளியுள்ளார்.
ரஜினியுடன் ஒரு சீன் நடித்தாலே போதும் என வரிசை கட்டி நடிகைகள் காத்திருக்கும் நிலையில், மகளாக நடிக்க சான்ஸ் கிடைத்து கடைசியில் படம் டிராப் ஆனது குறித்து நடிகை மாளவிகா மோகனன் புலம்பி வருகிறார்.
இதையும் படியுங்க : ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!
நடிகை மாளவிகா மோகனன் நல்ல திறமையான நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் வெளியான தங்கலான் படத்தில் மாளவிகா நடிப்பு பேசப்பட்டது.
இவர் 2019ல் ரஜினியின் பேட்ட படத்தில் அறிமுகமானார். சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா கமிட் ஆனார்.
இது குறித்து சமீபத்தில் பேட்டியில் கூறிய மாளவிகா, ரஜினியை வைத்து லோகேஷ் இயக்க இருந்ததாகவும், இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க கமிட் ஆனதாகவும், கொரோனா காலம் என்பதால் கடைசியல் படம் டிராப் ஆனதாக வருந்தியுள்ளார்.