2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் ! அப்போ இந்தியன்2-வோட நிலமை ?

Author: Udayaraman
16 October 2020, 4:34 pm
Quick Share

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.

இவரை பார்த்து பல பேர் இந்த தமிழ் சினிமாவில் நிறைய கலைஞர்கள் நுழைந்துள்ளார்கள். உதாரணம் விக்ரம், சூர்யா, லோகேஷ் கனகராஜ் என பல கலைஞர்கள் இவரின் திறமையை பார்த்து, Inspire ஆகி இந்த துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

நடிப்பு என்றால் என்ன என்பதை இவரை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என Upcomming Actors கூறி வருவது நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கிறார் கமல்.

தற்போது மக்கள் நீதி மையத்தின் கட்சியின் தலைவராக இருக்கும் இவர், நேரம் கிடைக்கும் போது எல்லாம் பாஜக அரசையும், தமிழக அரசையும் கிண்டலடித்து நக்கலடித்து பேசுவார். இந்த நிலையில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் படமான இந்தி என்று படம் கிட்டத்தட்ட 10 மாத காலங்களாக படப்பிடிப்பு முடியாத நிலையில் கிடப்பில் கிடக்கிறது.

இந்தநிலையில் 2021-இல் வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிற்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இந்த நிலையில் இவர் நடிக்கவிருக்கும் படமான இந்தியன்2, தலைவன் இருக்கின்றான், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என பட்டியல் நீண்டுகொண்டே போக, என்ன செய்யப் போகிறார் என்று ஆவலாக காத்து இருக்கிறார்கள் மக்கள்.

Views: - 60

0

0