என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!

Author: Vignesh
18 June 2024, 10:30 am
director mohan g
Quick Share

திருநெல்வேலியை சேர்ந்த மதன், உதய தாட்சாயணி என்பவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், எதிர்ப்பை மீறி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் திருமணம் நடந்தது.

director mohan g

மேலும் படிக்க: காஸ்ட்லி வில்லனான பகத் பாசில்… புஷ்பா 2 -வில் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?..

ஆத்திரமடைந்த பெண் வீட்டார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, தற்போது பேசிய இயக்குனர் மோகன் ஜி இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும். இது எந்த மாதிரியான வலி என்றும், பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்னதான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே. அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள். அதுவே, உண்மையான காதல் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 117

0

0