சினிமா / TV

பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?

திடீரென வைரல் ஆன பெண்…

கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16 வயது பெண் திடீரென இணையத்தில் வைரல் ஆனார். சொக்க வைக்கும் கண்களையுடைய அவரது அழகான புகைப்படங்கள் இணையத்தில் இளைஞர்களை கவர்ந்திழுக்க பலரும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து 2024 ஆம் ஆண்டின் வைரல் பெண்ணாக ஆக்கினார்கள். 

இந்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பெண், கும்ப மேளாவில் தனது குடும்பத்துடன் மாலை, ருத்ராட்சை போன்றவற்றை விற்றுவரும் தொழிலை மேற்கொண்டு வந்தார். ஆனால் திடீரென அவரது புகைப்படம் வைரல் ஆன நிலையில் அவருக்கு ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகியது. அவர் தொழில் செய்யும் இடத்திற்குச் சென்று அவரை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடியது. 

தேடி வந்த பாலிவுட் பட வாய்ப்பு…

இவ்வாறு மோனலிசா இந்தியாவின் வைரல் பெண்ணாக வலம் வர, அவரை தேடி பாலிவுட் பட வாய்ப்பும் வந்தது. இயக்குனர் சனோஜ் மிஸ்ரா என்பவர் தான் இயக்கவுள்ள “டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற புதிய திரைப்படத்தில் மோனலிசாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்தார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆக, அத்திரைப்படத்தின் பணிகளும் தொடங்கப்பட்டது. 

பாலியல் வழக்கில் கைது

ஆனால் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்தது.  திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்கவைத்து ஏமாற்றி உறவு வைத்து வந்ததாக அப்பெண் புகார் அளித்த நிலையில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதனால் மோனலிசாவின் சினிமா வாய்ப்பு பறிபோனது.

மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு

பட வாய்ப்பு பறிபோனதால் மனம் உடைந்து போனார் மோனலிசா. இந்த நிலையில் அவர் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பாலிவுட்டில் இருந்து ஒரு தகவல் கசிகிறது. மிக விரைவிலேயே அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. 

எனினும் மோனலிசா, பல ஊர்களில் பல கடைத் திறப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டு வருகிறார். இதன் மூலம் அவர் மிகவும் பிசியாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

Arun Prasad

Recent Posts

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

21 hours ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

22 hours ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

22 hours ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

23 hours ago

ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…

23 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகளா? வெளியான தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…

1 day ago

This website uses cookies.