கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான்.’
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் இளம் நடிகர்-நடிகைகளிடம் பணம் மோசடி நடப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி குற்றம் சாட்டி உள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேனேஜர் எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் இளம் நடிகர் நடிகைகளிடம் பேசி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கு உங்களை நடிக்க வைக்கிறோம் என்றும், பணம் அனுப்பினால் ஆடிஷனுக்கு வரும்போது அணிய தேவையான ஆடைகளை வாடகைக்கு தருகிறோம் என்று பேசி பணம் வசூல் செய்து வருகிறாராம். சினிமா துறைக்கு வர வேண்டும் என்ற கனவில் இருக்கும் இளம் நடிகர் நடிகைகளிடம் இந்த மோசடி நடந்துள்ளதாகவும், இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.