சீரியல் நடிகரை கரம் பிடித்த லப்பர் பந்து நடிகை…வாழ்த்து மழையில் புதுமண ஜோடி..!

Author: Selvan
20 January 2025, 4:58 pm

எளிமையாக நடந்த நடிகை மௌனிகா திருமணம்

கடந்த வருடம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் மௌனிகா,இவர் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து,ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்.

Mounika and Santhosh love story

இந்த நிலையில் இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சனி சீரியலில் நடித்து வரும் சந்தோஷை,சந்தோசமாக காதலித்து கரம் பிடித்துள்ளார்.சீரியல் நடிகர் சந்தோஷ் ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்க: வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!

அதன்பின்பு அண்ணா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் திடீரென அதிலிருந்து விலகினார்.சந்தோஷ்-மௌனிகா இருவரும் காதலித்து வந்த நிலையில்,இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் முடிந்தது,தற்போது இவர்களின் திருமணம் கேரளா முறைப்படி எளிமையாக நேற்று நடந்து முடிந்துள்ளது.

இவர்களுடைய திருமணத்திற்கு பல சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!