பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் சூப்பர் 30 , பாட்லா ஹவுஸ் படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கில் 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அந்த ஒரு படத்திலே சூப்பர் ஹிட் ஹீரோயினாக முத்திரை பதித்து சம்பளத்தை உயர்த்தினார்.
தற்ப்போது இந்தியில் சர்ச்சை கிளம்பியுள்ள தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பாலியல் உறவு தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர், ” செக்ஸ் மற்றும் காமத்தைப் பற்றி முதிர்ச்சியடைந்த உரையாடல் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். சின்ன பசங்களுக்கு காமத்தை குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். இதனால் தவறான தகவல் மற்றும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும்” என கூறியுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…
ஆப்ரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
This website uses cookies.