இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா நடிகருக்கு திருமணம்!

25 January 2021, 2:07 pm
Quick Share

இசையமைப்பாளரும், நடிகருமான சித்தார்த் விபின் நேற்று கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த் விபின்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, நவரச திலகம், ஹலோ நான் பேய் பேசுகிறேன், காஷ்மோரா, கதா நாயகன், பிரம்மா டாட் காம், கேப்மாரி என்று பல படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த் விபின். நடிகரோடு இல்லாமல், இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் திகழ்கிறார். மேலும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ஜாக்சன் துரை, ஹலோ நான் பேய் பேசுகிறேன், முத்தின கத்தரிக்காய், பிரம்மா டாட் காம், ஜூங்கா, திருமணம், கேப்மாரி என்று பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சித்தார்த் விபினுக்கும் ஷ்ரேயா என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது. கேரளா பாரம்பரிய முறைப்படி நடந்த சித்தார்த் விபின் – ஷ்ரேயா திருமண நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும், ஆஷ்னா சவேரியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் சித்தார்த் விபின் – ஷ்ரேயா தம்பதியினருக்கு தஙகளது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 7

0

0