“என் கணவர் என்னை கொடுமை படுத்தினார்..” அபிஷேக் மனைவியின் VIDEO VIRAL..

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 12:53 pm
Bigg Boss Abishek Raja Wife -Updatenews360
Quick Share

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 2 வாரம் ஆனாலும் இதுவரை பெரிதாக சண்டையும், பரபரப்பும் நிகழவில்லை.

இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதை சொன்னாலும், பாதிப்பேர் இன்முகம் மக்கள் மனதில் பதியவில்லை, காரணம் அவர்கள் பதியும்படி எதுவும் செய்யவில்லை. பிக் பாஸ் வீட்டில் முதன்முதலாக சண்டை போட்டு டி.ஆர்.பியை உயர்த்தியவர் நமீதா மாரிமுத்து தான். தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். மேலும் அபிஷேக் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய திருமண வாழ்க்கை கசப்பாக இருந்ததாகவும், அதனால் தன் தந்தையை இழந்ததாகவும் உருக்கமாக பேசினார்.

இந்த நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘தனது முன்னாள் கணவர் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பிக் பாஸ் நிகழ்ச்சியை விட வைரலாக பரவுகிறது.

Views: - 477

0

0