என் வாழ்க்கையை அழிச்சதே ரஜினி தான் – உண்மையை உடைத்த மனிஷா கொய்ராலா!

Author: Shree
29 March 2023, 9:54 pm
manisha
Quick Share

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியால் தான் எனக்கு சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டதாக கூறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் கூறிய அவர் என்னுடைய மொத்த கேரியரை தொலைக்க காரணம் பாபா படம் தான். அந்த ஒரு படத்தால் ஒட்டுமொத்த தென்னிந்திய மொழிகளில் எனக்கு மார்க்கெட் சரிந்தது. பின்னர் எந்த வாய்ப்பும் வரவில்லை தொடர்ந்து இந்தியிலும் மார்க்கெட் இழந்தேன் என கூறு வருந்தினார். இதையடுத்து ரஜினியை பலரும் கிண்டலடித்து வருகிறார்கள் .

Views: - 47737

275

244