“நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருப்பேன் ‘..! விவாகரத்துக்கு பிறகு மனம் திறந்த நடிகர் நாக சைதன்யா..
Author: Mari13 January 2022, 2:10 pm
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யா – சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த விவகாரம் இந்திய திரையுலக வட்டாரத்தில் அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசியும், அனைத்துமே தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து, இவர்களது பிரிவுக்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டது.
இதனையடுத்து, நடிகை சமந்தா தனது சினிமா துறையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்த விவகாரத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் மௌனமாக இருந்து வந்த நடிகர் நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
நாக சைத்தன்யா மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் வெளியாகவுள்ள பங்காருராஜூ படத்தின் பிரமோஷனில் பங்கேற்று பேசிய அவர், இருவரின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சமந்தா மகிழ்ச்சி இருந்தால், நானும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
0
1