பிரபல தமிழ் நடிகரின் மகளுடன் காதலில் நாக சைதன்யா? இணையத்தில் தீயாய் பரவும் ட்வீட்..

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 2:00 pm
Quick Share

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல் அவர்களின் மூத்த மகளான இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ள இவர், 2009ல் வெளியான லக் படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் பாலையாவுடன் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி பிரபலமாக திரையுலகில் வலம் வரும் இவரை பற்றி அவ்வபோது சில கிசுகிசுக்கள் வெளிவருவதுண்டு. பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருடன் கூட சில கிசுகிசு வந்த போது, அதற்கு பதிலடி கொடுத்துவிட்டார்.

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா உடனான கிசுகிசுக்களை மட்டும் இன்னும் எந்த காரணமும் சொல்லாமல் இருக்கிறார். நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் ஸ்ருதி ஹாசனுடன் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் கிளம்பின. அத்தோடு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதுவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் தங்களுடைய நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அவர்களின் காதல் முடிவுக்கு வந்து பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் இவை எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை, அவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலித்தனரா இல்லையா என்பதும் பலரும் அறியாத ஒன்றுதான். ஆனால், ஒரு சில வருடங்களிலேயே அவர்களின் காதல் முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் மனம் ஒன்றி பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர்களின் காதல் பிரிவுக்கு காரணம் ஸ்ருதியின் தங்கை அக்ஷரா என்று கூறப்பட்டாலும், வெளிப்படையான காரணம் எதுவும் வெளியாகவில்லை. அதற்கு பின்னர் தான் நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1700

62

39