சமந்தா மீது எம்புட்டு பாசம்… பிரிந்த பின்பும் மருமகளை விட்டுக்கொடுக்காத நாகார்ஜூனா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சமந்தா கணவரை பிரிந்து 3 வருடத்திற்கு மேல் ஆகியும் அவரது மாமனார் நாகர்ஜூனாவுக்கு சமந்தா மீதுள்ள பாசம் கொஞ்சம் ஓட குறையவே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆம், நாகார்ஜூனா வீட்டின் ஹாலில் சமந்தா- நாக சைதன்யா திருமண புகைப்படம் இன்றும் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரிந்தும் இன்னும் ஏன் அந்த புகைப்படத்தை எடுக்கவில்லை? என கேட்டதற்கு அந்த புகைப்படத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதாகவும் அதனால் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

4 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

55 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

1 hour ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.