நடுக்காட்டில் வௌவால் போல தொங்கிய நமிதா – அதிர்ச்சியில் ரசிகர்கள் !

2 March 2021, 5:09 pm
Quick Share

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.

அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா.இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா.

அதில் நமீதா நடுக்காட்டில் வௌவால் போல மரத்தில் தொங்குகிறார். நமீதாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள்,” என்ன நம்ம நம்முக்குட்டி மரத்துல தொங்கிக்கிட்டு இருக்காங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

ஏற்கனவே இந்தப் படத்தின் காட்சி ஒன்றுக்காக கிணற்றில் விழுந்து தவிப்பது போல் நடித்த நமீதாவை பார்த்து , அதை உண்மை என நினைத்து ஷூட்டிங் பார்க்க வந்த மக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள் என்பது கூடுதல் தகவல்.

Views: - 328

2

0