ஆனந்தம் விளையாடும் வீடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

1 March 2021, 9:40 pm
Quick Share

கௌதம் கார்த்திக் குடும்பக் கதையில் நடித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கௌதம் கார்த்திக். கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவஹி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம், மிஞ்சர் சந்திரமௌலி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல பட த்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், குடும்பக் கதையில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப் படத்தில், கௌதம் கார்த்திக் உடன் இணைந்து சேரன், சரவணன், ஜாக்குலின், மைனா நந்தினி, சிங்கம் புலி, சிவாத்மிகா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் நடக்கும் சண்டையை மையப்படுத்தியும், பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் கதையையும் மையப்படுத்தி ஆனந்தம் விளையாடும் வீடு படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

நவரச நாயகன் கார்த்திக் நடித்த வருஷம் 16 படத்தை இந்தப் படம் நினைவுபடுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் ஆகியவற்றை இந்தப் படம் பிரதிபலிக்கும்.
இந்தப் படத்திற்காக கௌதம் கார்த்திக் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 6 கிலோ வரை கூட்டியுள்ளார். திண்டுக்கல் பகுதியை சுற்றிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில், திருவிழாவின் போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியை நினைவுபடுத்தி இந்த ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

Views: - 19

0

0