அஜித்குமார் சமீப காலமாக கார் பந்தயங்களில் அதிகளவு ஈடுபாடு காட்டி வருகிறார். அஜித்குமாரின் இளமை காலத்தில் இருந்தே அவருக்கு கார், மோட்டார் போன்ற வாகனங்களில் அதிக ஈடுபாடு உண்டு. சினிமாவில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயங்களில் கலந்துகொள்ளலாம் என்பதற்காகத்தான் அவர் சினிமாவிற்குள்ளே நுழைந்தார் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு.
பல கார் பந்தயங்களில் பல விபத்துகளில் சிக்கி அவரது முதுகில் அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளது. சில காலம் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர், தற்போது மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் அவரது அணி பல போட்டிகளில் கோப்பைகளை அள்ளி வருகிறது. இந்த நிலையில் அஜித்குமாரின் அணியில் ஒரு பிரபல கார் பந்தய வீரர் இணைந்துள்ளார்.
இந்தியாவின் மிகப் பிரபலமான கார் ரேஸராக திகழ்ந்து பல உலக சாதனைகளை படைத்தவர்தான் நரேன் கார்த்திகேயன். இவர் தமிழ்நாட்டின் கோவை பகுதியைச் சேர்ந்தவர். பல சர்வதேச கார் போட்டிகளில் இவர் பல கோப்பைகளை வென்றுள்ளார். இவர் மிகத் திறமையான ஃபார்முலா 1 ரேஸர் ஆவார். இந்த நிலையில் நரேன் கார்த்திகேயன் தற்போது அஜித்குமாரின் அணியில் இணைந்துள்ளார். ஏசியன் லீ மேன்ஸ் என்ற கார் பந்தயத்தில் இவர் அஜித்குமாரின் அணியின் சார்பாக கலந்துகொள்கிறார்.
இது குறித்த அறிவிப்பை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். “நரேன் அணியில் இணைவது உண்மையில் எங்களது பாக்கியம். அவருடன் இணைந்து போட்டியிடுவது ஒரு மரியாதை” என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.