நடிகை நயன்தாரா செம்பருத்தி டீயை தான் தினமும் குடித்து வருவதாக கூறி அது குறித்த மருத்துவ பயன்களை தனது instagram-ல் பதிவிட்டார். அதாவது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவர்களுக்கு செம்பருத்தி டீ மிகவும் நல்லது என பதிவிட்டிருந்தார்.
நயன்தாராவின் இந்த பதிவிற்கு டாக்டர் பிலிப்ஸ் என்ற கல்லீரல் மருத்துவர் தனது எக்ஸ் தளத்தில் … நயன்தாரா செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோடு நிறுத்திக் கொண்டால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால், அதோடு நிறுத்தாமல் செம்பருத்தி டீ யின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தி டீ யை தினமும் குடித்து வருவதால் பெண் மற்றும் ஆண்கள் இருவருக்குமே பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதை தினமும் குடித்து வந்தால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.
இதநாள் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா தொடர்ந்து தினமும் செம்பருத்தி டீ குடித்து வந்த காரணத்தால் தான் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் தான் அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டதா? என நெட்டிசன்ஸ் பலவிதத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி ஒரே ஒரு போஸ்ட் போட்டுவிட்டு தன்னுடைய ஒட்டுமொத்த ரகசியத்தையும் இப்படி உடைத்து விட்டாரே நயன்தாரா என விமர்சித்து தள்ளி இருக்கின்றனர். நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.