பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.
அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கிய அத்தனை படமும் வேறு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்களால் அப்பட்டமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதே போல் தற்போது இந்திக்கு சென்றும் காப்பியடிச்சான் வேலை பார்த்துள்ளார் அட்லீ. ஆம், ஜவான் படத்தின் சண்டை காட்சி ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படங்களுக்கும் ப்ரமோஷனுக்கு வராத நயன்தாரா, தற்போது ஜவான் படத்திற்கான பிரமோஷன் செய்ய ஓகே தெரிவித்துள்ளாராம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதை அவர் தன்னுடைய கொள்கையாகவே வைத்திருந்தார் என்று சொல்லலாம். ஆனால் தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கை நயன்தாரா விட்டுக் கொடுக்கப் போகிறார் என கூறப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.