தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.இவர் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் நடிகர் மம்மூட்டியும்,மோகன்லாலும் சேர்ந்து நடிக்கின்றனர்.கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்க உள்ளனர். படத்தினை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார்.
ஃபஹத் பாசில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கி லண்டன்,தாய்லாந்து,கொச்சி,டெல்லி என பல இடங்களில் மிக பெரிய பட்ஜெட்டில்,கிட்டத்தட்ட 150 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: உருகி உருகி காதலித்த ரசிகை… ரகுமானும் காதலித்தாரா ?..வெளிவராத ரகசியம் ..!
இந்த படத்தில் இவர்களை தவிர்த்து ராஜீவ் மேனன்,ரேவதி,குஞ்சாக்கோ போபன், ஷாஹின் சித்திக் என பலர் நடிக்க உள்ளனர்.இப்படத்திற்காக மம்மூட்டி 100 நாட்களும் மோகன்லால் 30 நாட்களும் கால்ஷூட் கொடுத்துள்ளனர்.
இப்படத்தினை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
மிகப்பெரிய திரைப்பிரபலங்கள் நடிப்பதால் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது .படத்தின் தலைப்பு இன்னும் தெரிவிக்காத நிலையில்,இந்தப் படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.