புது லுக்கில் நயன்தாரா..! ஆச்சரியப்படும் ரசிகர்கள்..!

Author: Rajesh
3 February 2022, 3:49 pm
Quick Share

மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘லூசிபர்’. இப்படம் தெலுங்கிலவ் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கின்றனர்.இதனிடையே சில மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தபடத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பதால் அவர் சம்பந்தப்படாத மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின் ஹோட்டலுக்குத் திரும்பிய நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. தன்னைப் புகைப்படம் எடுப்பதைக் கொஞ்சம் கோபத்துடன் நயன்தாரா பார்க்கும் வீடியோவும் வெளிவந்துள்ளது.

Views: - 1869

13

10