ஹிட் ஹீரோவுக்கு அக்காவாகும் நயன்தாரா – யார் தெரியுமா?

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவரது நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

அடுத்ததாக நயன்தாராவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “LIC – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இதில் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை ரூ. 60 கோடி பட்ஜெட்டில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அக்காவாக நடிக்கப்போகும் நயன்தாராவின் ரோலுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஷால் மயங்கி விழுந்தததற்கான காரணம்? அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த மேனேஜர்! அடப்பாவமே…

மயங்கி விழுந்த விஷால் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருநங்கைகளுக்கான…

2 hours ago

தயாரிப்பாளருடன் மோதிய விக்னேஷ் சிவன்? பிரச்சனைக்கு Full Stop வச்சாச்சா? வெளியான திடீர் வீடியோ…

அதிக பட்ஜெட் வேணும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “LIK”. இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ்…

3 hours ago

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

2 days ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

2 days ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

2 days ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

2 days ago

This website uses cookies.