விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. அதனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது நெட்பிலிக்ஸ். “Nayanthara: Beyond the fairy tale” என்று பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண வீடியோவிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இது நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் “டெஸ்ட்”. இத்திரைப்படத்தை சசிகாந்த் தயாரித்து இயக்கியிருந்தார். இதில் நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒரு ஸ்போர்ட்ஸ் திரில்லராக உருவாகியிருந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இத்திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு வாங்கியது. ஆனால் இத்திரைப்படத்திற்கு மிகவும் சுமாரான வரவேற்பே கிடைத்த நிலையில் தற்போது வரை இத்திரைப்படத்தால் ரூ.5 கோடி கூட வருமானம் வரவில்லையாம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.