நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் திருமணம் குறித்து Nayanthara : Beyond The Fairy Tale என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்த ஆவணப்படம் நேற்றைய முன்தினம் வெளியிடப்பட்டது. இதனிடையே இந்த படத்திற்காக நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய நடிகர் தனுஷிடம், 3 விநாடி வீடியோவை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்தார் நயன்தாரா. இதுகுறித்த நீண்ட அறிக்கையை வெளியிட்ட அவர், தனுஷ்க்கு எதிராக புயலை கிளப்பியிருந்தார்.
அதாவது, நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. அதனால் அந்த படப்பிடிப்பில் இருந்து BTS காட்சியை ஆவணப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
இதற்காக தனுஷ் NOC கேட்டு நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதை குற்றம்சாட்டிய நயன்தாரா, தனுஷ் தன்னை பழிவாங்குகிறார் என்றும், அதனால் நானும் என் கணவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த விவகாரத்தில் நயன் மற்றும் தனுஷ்க்கு எதிராக ஆதரவாகவும் கருத்துக்களை பலரும் கூறினர். இந்த சூழலில் ஆவணப்படமும் வெளியானது.
இதையடுதது இன்று நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் ஆவணப்படம் வெளியானதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, சிரஞ்சீவி, ராம்சரண், விஜயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களுக்கு நன்றி கூறியுள்ளார். இதில் தனுஷ் பெயர் சேர்க்கவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவை நன்றி மறந்தவர் என குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.