பிரபல நடிகை நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் நயன்தாரா..!

Author: Rajesh
26 March 2023, 3:15 pm
Quick Share

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

pradeep ranganathan - updatenews360

பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர். காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே.

இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தினை வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினார். இப்படத்தில் விக்னேஷ் சிவனுக்கு ஜோடியாக நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா நடிக்க ஓகே கூறியதாக கூறப்பட்டது.

nayanthara

மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரானா குமாரு படத்தில் அவருக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க கமிட்டாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகையும் இயக்குனர் சங்கர் மகளுமான அதிதி சங்கரிடம் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அதிதி நடிக்க மறுத்துள்ளாராம். இந்நிலையில், நடிகை நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் பிரதீப்க்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஒரு படம் தான் நடிப்பில் வெளியான அதிதிக்கு இப்படியும் ஒரு ஆணவமா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

aditi shankar - updatenews360

Views: - 100

0

1